Guest Join UsHey Guest,
Welcome, Join our awesome community where you can discuss on various topics :-
Some point about your community
Some point about your community
Some point about your community
Some point about your community
Some point about your community
Some point about your community
Some point about your community
Much More.. or Create an Account


I am super Awesome Announcement, with links and can be used to announce important things. Check here
Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
♥பருவத்திரு மலரே-34♥(வாசகர் கதைகள்)
#1
[Image: 2665.png]பருவத்திரு மலரே-34[Image: 2665.png](வாசகர் கதைகள்)

ராசு போனபின்.. அவளுக்குச் செய்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை. காளீஸ் வீட்டுக்கு போகலாம் என்ற எண்ணம் தோண்றியது. ஆனால் ஏனோ. இப்போது அங்கு போகப்பிடிக்கவில்லை.
கதவை லேசாகச் சாத்திவிட்டுப் பாயை விரித்துப் படுத்து தூங்கிப்போனாள்.

(நீங்களும் உங்கள் கதையை எங்களுடன் பகிருந்து கொள்ளுங்கள் . எங்கள் தளத்தில் பதிவு(Register)செய்து உங்கள் கதையை எழுதவும்) . தயவு செய்து பெரிய கதையாக எழுதவும் . கதையை இங்கும் அனுப்பலாம் : [email protected]

இந்த கதையை எழுதியவர் : MUKILAN

திடுமென அவளது தோள் தட்டப்பட. சட்டென கண்களைத் திறந்தாள்.பாக்யா.
முத்து சிரித்தாள்.
"என்னப்ப. இப்ப தூக்கம்..?"
"அடப் பல்லி.. நீயா..! எப்ப வந்த. .?"

முத்து உட்கார்ந்து விட்டாள்.
"இப்பத்தான்.. வந்தேன்.."
"எப்படி போச்சு.. ஊர்ல..?"
" ஓ. சூப்பரா போச்சுப்பா..!!"
" உன்னோட வெள்ளிய பாத்தியா. .?" படுத்துக்கொண்டேதான் பேசினாள் பாக்யா.
"சினிமாக்கெல்லாம் போனம்ப்பா.."
" நீங்க ரெண்டு பேருமா..?"
" இலல.. அவனோட தங்கச்சி.. என் தம்பி எல்லாருமா சேந்து போனோம்."
" க்கும்.! போடீ. நாங்கூட நீங்க ரெண்டு பேரும் தனியா போனீங்களோனு நெனச்சேன்."

மாலைவரை.. முத்துவுடன்தான் பொழுதைக்கழித்தாள் பாக்யா.
முத்துவோ.. வெள்ளியைப் பற்றின பாட்டாகவே பாடிக்கொண்டிருந்தாள்.

பள்ளத்து ஓரமாக. ஒரு ஜாதி முல்லைப் பூக்காடு இருக்கிறது.
மாலையில் இருவரும்.. பூப்பறிக்கப் போனார்கள். பூ பறித்துக் கொண்டிருந்த போது பரத் வந்தான்.

" ஆ.. வந்தாச்சுப்பா.." என்றாள் முத்து.
"அவனுக்கு வேற வேலை என்ன.. நீ பேசாம.. பூப்பொறி.." என்றாள் பாக்யா.

பக்கத்தில் வந்த பரத்.
"உங்க மாமா போயாச்சா..?" என பாக்யாவிடம் கேட்டான்.
" ஓ.!" சிரித்தவாறு தலையாட்டினாள்.
"ஏதாவது சொன்னாப்லயா..?"
"ஓ.. சொன்னான்.."
"என்ன. ..?"
"நீ ஒரு. . பொருக்கினு.." எனச் சிரித்தாள்.

ஒரு பூச்செடிக் குச்சியை முறித்து.. அவளை அடித்தான்.

முத்து.." அப்படியா..?" எனக் கிண்டலாகச் சிரித்தாள்.
பாக்யா " அய.. சும்மா சொன்னேன்.. அவனுக்கு எங்க லவ்வே தெரியாது.." என்றாள்.

பரத் " சரி.. வா கொஞ்ச நேரம் போய் பேசிட்டு வல்லாம்.." எனக்கூப்பிட்டான்.
"என்ன பேசனுமோ.. அத இங்கயே பேசு.."
"பல்லி இருக்காளே..?"
" ஆ.. அவளுக்கு ஒன்னுமே தெரியாது பாரு."
அவன் சிரித்து "ஆனா என்னப்பத்தி தெரியாது.. ஐயா யாருனு.." என்றான்.

உடனே முத்து.. "ஏ.. உன்னப்பத்தி ஊருக்கே தெரியும்.. எனக்கா தெரியாது.?" என்றாள்.

பரத் "அப்ப நீ வா.." என்றான்.
"நான் எதுக்கு.?"
" சும்மா .கல்ல போடலாம்.."
" ஆ.. நெனப்புதான்.. அதுக்குத்தான். இவ இருக்கா.."
"ஆனா நந்தி மாதிரி.. நீ இருக்கியே.."

பாக்யா "சரி. நாங்க போறோம்.." என்றாள்.
" ஏய்..இரு. பேசனும். ."
"என்ன பேசப்போறே..? எப்ப கல்யாணம்னா..?"
"ஏன். . கல்யாணத்துக்கு அவசரமா..?"

முத்து " அவளுக்கென்ன அவசரம்..? உனக்குத்தான் அவசரமாட்டக்குது..?" என்றாள்.
" ஏய்.. நீ ஏன்டி.. எடைல பூதற.?"
" மொத.. இவ கழுத்துல ஒரு தாலியக்கட்டு. அப்பத்தான்.. யாரும் எடைல வரமாட்டாங்க."

பாக்யாவும் "ஆமா.." எனச் சிரித்தாள்.
"அப்ப.. உன் படிப்பு..?"

" அதுக்கு கெடக்கு. மயிறு.."
"மயிறா.?"
" படிச்சு என்ன. கலெக்டராவா ஆகப்போறேன்..? எப்படியும் உனக்குத்தான் பொண்டாட்டியாகி .. குப்பை கொட்டப்போறேன்..! அதுக்கு எதுக்கு. உலுந்து. உலுந்து படிக்கனும். .?"
" அப்ப கல்யாணம் பண்ணிக்கலாமா..?"
"ஓ."

விளையாட்டாக ஆரம்பித்த.. அந்தப் பேச்சு. சீரியஸாகி விட்டது.

விளைவு.??

மறுநாளே. அவர்களது திருமணம் பற்றிப் பேசத்தொடங்கினர். அதில் முத்துவுக்கு. பெரும் பங்கு இருந்தது.

பரத் எவ்வளவோ.. முயன்றும்..அவனுடன் உடலுறவு கொள்ள மறுத்து விட்டாள். திருமணம் முடிந்த பிறகே. அது எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டாள்.

இந்த விசயம் காளீஸ்க்கு சொல்லப்பட்டு.. அவளும் வந்து பேசினாள். காளீஸிடம் மட்டும்.. அவள் ஒருமுறை.. உடலுறவில் ஈடுபட்டு விட்டதைச் சொன்னாள்.

பரத்துடன் பிறந்தவர்கள்.. மூன்று பேர் இருந்தனர்.
அவனது அக்காவுக்கு கல்யாணமாகி விட்டது. இன்னும் அவனது அண்ணனும்.. தங்கையும் இருந்தார்கள்.
அண்ணனுக்கு முன்.. இவன் திருமணம் செய்து கொள்ள.. பயந்தான். அவன் வீட்டில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதைச் சொன்னான்.

ஆனாலும் பாக்யா பிடிவாதமாக நின்றாள். அடுத்த வந்த சில நாட்களில்.. அதைப் பற்றித் தீவிரமாக விவாதித்துக்கொண்டனர்.

அதே சமயம்.. காலவாயில் மீண்டும் வேலை துவங்கப் பட்டது. இந்த முறை.. புதிய ஆட்கள் நிறையப் பேர் வேலைக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். அதனால்.. முன்பே இருந்த.. குடியிருப்புகள் பற்றாமல்.. காலவாயின் கிழக்குப் பக்கம் இன்னொரு புதிய.. குடியிருப்பு வரிசை அமைக்கப் பட்டது..!

அந்த நேரத்தில். பாக்யாவுக்கும்.. பரத்துக்குமான.. திருமண நாளை.. முடிவு செய்தனர் காளீஸ்வரியும்.. அவளது கணவனும்.!

அவர்கள் திருமணத்தை.. இரண்டு நாள் இடைவெளியில்.. நடத்தி விடுவதென முடிவு செய்தனர்.
அந்த இரண்டு நாளும். பயங்கரமான. மன உளைச்சலுக்கு ஆளானாள் பாக்யா.
தனிமையில்.. அவ்வப்போது அழுதாள். ஆனாலும். அவள் கல்யாணத்துக்கு தயாராகவே இருந்தாள்..!

முதல்நாள். .. பாக்யாவின் அப்பா. அவளிடம் ஒரு.. எழுமிச்சங்கனியைக் கொடுத்தார்..!
கையில் வாங்கும் முன் கேட்டாள்.
"என்னப்பா..இது..?"
"கனி.." என்றார் "இத நாலா.. அறுத்து நாலு மூலைலயும் வீசிறு. உங்கம்மா தன்னப்போல.. வந்துருவா.." என
நம்பிக்கையுடன் சொன்னார்.

ஆனால்.. அவள் அதுபோலச் செய்யவில்லை. அப்படியே கொண்டு போய்.. முழுதாக.. பலகை மேல் வைத்து விட்டாள்.

அடுத்த நாள் இரவு..!
அவள் அப்பா.. தூங்கியவுடன் வீட்டைவிட்டுக் கிளம்பிவிட்டாள். பரத் அவளை காளீஸ் வீட்டுக்கு கூட்டிப் போனான். அங்கிருந்து. பக்கத்து ஊரில் இருந்த.. அவளது உறவினர் வீட்டுக்கு.. அவர்களை அனுப்பி வைத்தாள்..காளீஸ்வரி.
விடிந்தால்.. கோவிலில் வைத்து திருமணம்.!!

ஆனால்....

அவர்கள் போய்ச்சேர்ந்த.. ஒரு மணிநேரத்தில். அவர்களைத் தேடிககொண்டு.. அவள் அப்பாவும்.. காலவாய் ஓனரும். வந்து விட்டனர்..!
எப்படி விசயம் தெரிந்ததென..அவர்கள் யாருக்குமே தெரியவில்லை.

விதிர் விதிர்த்துப் போய் நின்ற. பாக்யாவை.பளீரென ஒரு அறைவிட்டார்.. அவளது அப்பா..!
அப்பா கையால் வாங்கிய முதல் அறை..!
பொறி கலங்கி விட்டது. அவர் விட்ட.. அறையில்.. காது செவிடாகி விட்டது என்றே தீர்மானித்தாள்.

அப்பறம்.. அவரைச் சமாதானம் செய்து. விசயம் இவ்வளவு தீவிரமாகி விட்டதை உணர்ந்து. அவர்கள் இருவரையும். ஊருக்கு அழைத்து வந்து. இரவோடு.. இரவாக. ஊர் பெரியவர்கள் எல்லாம் சேர்ந்து பேசி. அவர்களது திருமணத்தை.. முறையாக நடத்தி வைப்பது என முடிவு செய்தனர்.
ஆனால் அதற்கு. பரத் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லை. அவனைப் பிள்ளையே இல்லையென விட்டுவிட்டார்கள். மற்றபடி.. அவர்கள் பிரச்சினை பண்ண வில்லை.

அடுத்த நாள் காலையே. பாக்யாவின் அம்மாவிடம் போய்.. பேசி..நிலமையை விளக்கி. அவளை அழைத்து வந்து விட்டார்கள்.

அம்மா அவளோடு பேசவே இல்லை. அவளது அப்பாவை.. இப்படித்தான் என்றிலலாமல் பேசினாள்.
உண்மையிலேயே.. பாக்யா இந்த நிலமைக்கு வர.. அவளது அப்பாதான் காரணம் என எல்லோருமே அவரைத் திட்டினார்கள்..!

அதே நேரம்.. ஊரின் மேற்குப்பக்கத்தில் இருந்த.. அம்மன் கோவில்.. சாட்டப்பட்டிருந்தது..! கோவில் சாட்டு கொடுத்துவிட்டதால் கோவில் திருவிழா முடிந்த. மூன்றாவது நாள். அவர்கள் திருமணம் நடத்தப்படும் என்றும். அதற்கு. .. அந்த ஊரின்.. அத்தனை பேரும் வந்து கலந்து கொள்வார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதனால் ஒரு வாரம் அவர்கள் திருமணம் தள்ளி வைக்கப்பட்டது. .!

ஆனால். ..

உறவினர்களை அழைக்க. யாரும் தயாராக இல்லை. பாக்யாவின் பெற்றோர் கல்யாணத்துக்கு மட்டுமே வருவதாகச் சொல்லியிருந்தனர்.
மற்ற.. சீர்.. செனத்தி. எதற்கும் ஒப்புக்கொள்ளவில்லை.

அதனால் அவர்களது திருமணச் செலவை காலவாய் முதலாளியே ஏற்றுக் கொண்டான்.
{ காலவாயின் தற்போதைய முதலாளிக்கு. முப்பது வயதே ஆகியிருந்தது. அப்பாவிடமிருந்த பொருப்பை.. இப்போதைய முதலாளி ஏற்றிருந்தான். அவனுக்குத் திருமணமாகி. இரண்டு குழந்தைகள் இருந்தனர் }

ஊர் பெரியவர்கள் சொன்னது போல.. பாகயாவின் திருமணத்துக்கு.. அவளது உறவினர்கள் யாரும் அழைக்கப்படவில்லை. வீட்டில் எந்த ஏற்பாடும் நடக்கவில்லை. வீடே எழவு விழுந்த வீடு போலிருந்தது.
அது அவளுக்கு மிகப்பெரும் வேதணையாக இருந்தது. அவளது திருமணத்தை.. ஒரு வாரம் ஏன் தள்ளி வைத்தார்கள் எனக் கசப்பாக இருந்தது.

அவளது திருமணத்துக்கு இரண்டு நாள் முன்பு.!

பாக்யா வீட்டுக்குள்ளிருந்து வெளியே.போனபோதுதான் பார்த்தாள். களத்தில்.. வேலை செய்து கொண்டிருந்த.. அவளது பெற்றோருடன் நின்று பேசிக்கொண்டிருந்தான் ராசு.

அவனைப் பார்த்தவுடன்.. அப்படியே பொங்கிப் பூரித்துப் போனது அவள் மனசு
உடனே அவனிடம் போனாள்.

அவளைப் பார்த்தவன்.மிகச் சாதாரணமாக.அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு. எந்தவித உணர்ச்சி பாவத்தையும் வெளிக்காட்டாமல்..அவளது பெற்றோருடன் பேசத்தாடங்கினான்.

அமைதியாகப் போய்.. அவன் கையைப் பிடித்தாள்.

அவள் பெற்றோருடன் பேசியவாறே.அவள் மண்டையில் 'நறுக்' கென.. ஒரு கொட்டு வைத்தான். மண்டையைத் தேய்த்துக் கொண்டே நின்றுவிட்டாள்.
எல்லாம் அவளைப் பற்றின பேச்சாகத்தான் இருந்தது.

ஐந்து நிமிடம்கூட. அவளால் அங்கு நிற்க முடியவில்லை. அவன் கையைப் பிடித்து இழுத்தாள்.
"பேசுனது போதும்.. வா.."

அவளது அம்மா "சரி.. போய் உக்காரு தம்பி. இன்னும் சித்த நேரத்துல. முடிஞ்சிரும்..! வந்தர்றோம்.! இனி என்ன பேசி என்ன ஆகப்போகுது..? அவ தலச்சனியன்.. எப்படியோ. அப்படி நடக்கட்டும். ." என வேதனை கலந்த குரலுடன் சொன்னாள்.

எதுவும் சொல்லாமல்..அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டே இருந்த. பாக்யாவின் பின்னால் நடந்தான் ராசு.!!!!

- வரும்..!!!!

NEXT PART
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)

About RareDesi.com

Focus MyBB Theme is designed for MyBB 1.8 series and is tested properly till the most current version of MyBB i.e. 1.8.19. It is simple, clean and light MyBB theme with use of font-awesome icons and shrinking header.

For any more information, please use our contact form.

              Quick Links

              User Links

              Advertise